யாழ்ப்பாணம் அக்கரை கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் கரையில் ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலம் நேற்று (07-08) கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
