உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி தமிழ் தேசிய தலைவர்கள் ஒன்றுபட வேண்டுமெனகிறார் அருட்தந்தை மா. சத்திவேல்

செம்மணி புதைகுழிகளைத் தொடர்பாக வௌவேறு அரசியல் நோக்கங்களால் பிளவுகளை உருவாக்கும் செயல்களைத் தவிர்த்துஇ தமிழ்த் தேசியமாக நின்று ஒன்றிணைந்த அரசியல் செயற்பாடுகள் தேவைப்படுவதாக அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுவிக்கக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளரான இவர்இ இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அறிக்கையில்இ செம்மணி பகுதியில் தினசரி அகழ்ந்து எடுக்கப்படும் மனித எச்சங்கள் மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்துவதாகவும்இ அந்த அகழ்வுகள் தமிழர்களுக்கு நீதி தேடும் குரலாகவும் விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிருஸாந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சோமரத்தின ராஜபக்ச புதைகுழிகளுடன் தொடர்புடைய சாட்சிகளை வழங்கத் தயார் எனக் கூறியுள்ள நிலையில்இ அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்குள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறையும்இ அரசியல் கட்டமைப்பும்இ இனப்படுகொலை மற்றும் காணாமலாக்கங்களை உறுதி செய்வதில் தாமதம் செய்யும் நிலையையும் இதனுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் பதவி உயர்வுகளுடன் பாதுகாக்கப்பட்டமைக்கும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிருஸாந்தி வழக்கின் சட்டத்தரணியாக இருந்த குமார் பொன்னம்பலம் கொலை செய்யப்பட்ட சம்பவமும்இ அவருக்கான நீதி விசாரணை புதைக்கப்பட்டதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

சோமரத்தினவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம்இ சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்க வேண்டிய தேவை மற்றும் தமிழர்களின் நீதி கோரிக்கைக்கு வலுவூட்டுவதாகவும்இ அந்தக் கடிதம் ஆட்சியாளர்களுக்கான சவாலாகவும் விளங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் தலைமைகள்இ சோமரத்தினவின் மனைவியின் கடிதத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திஇ சர்வதேச நீதிக்கான அழுத்தத்தை ஒருமித்த குரலுடன் ஏற்படுத்த வேண்டும் எனவும்இ இனப்படுகொலையின் பயங்கர உண்மையை மறந்துவிடாமல்இ உண்மையை வெளிக்கொணரத் திரள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp