இந்தியா

அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு

ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் கடந்த 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும் விடுதி மற்றும் அதன் அருகில் இருந்வர்கள் 29 பேரும் உயிரிழந்தனர்.
ஜூன் 13ஆம் தேதி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.

கருப்புப் பெட்டி கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், தரவுகளை டவுன்லோடு செய்ய வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியானது.
ஆனால் அரசு இதை மறுத்தது.

இந்த நிலையில் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

சிவிஆர் (காக்பிட் குரல் பதிவு) மற்றும் எஃப்.டி.ஆர். (விமான தரவு பதிவு) ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் தலைவர் தலைமையில் பல்வேறு குழுக்கள் விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

You may also like

இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்
இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp