உள்ளூர் செய்திகள்

புதிய கொவிட் ஒமிக்ரோன் கண்டுபிடிப்பு – கண்காணிப்பை பலப்படுத்த சுகாதார அதிகாரிகள் முனைப்பு

இலங்கையில் புதிதாக ஒமிக்ரோன் துணை வகைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் கொவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதுவும் இல்லை என்ற போதிலும்,அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கின்றது விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் புதிதாக ஒமிக்ரோன் துணை வகைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

புதியமாறுபாடுகள் தோன்றுவது வைரஸ் பரிணாமா வளர்ச்சியின் ஒரு வழக்கமான பகுதியாகும் என மருத்துவநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.காலத்திற்கு காலம் இந்த புதிய மாறுபாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன,இதனை எதிர்கொள்வதற்கு எங்களின் அமைப்பு முறைகள் தயாராக உள்ளன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நிலவரங்கள் குறித்து சுகாதார தரப்பினர் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp