உள்ளூர் செய்திகள்

தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைத்த நகைகளை திருப்பி தருமாறு கோரிக்கை!

தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது , உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம்(31) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், நகைகளை அடகு வைத்தவர்களில் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் என்பவரே அவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார்.

குறித்த கோரிக்கையில், உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் புலிகளின் வங்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகள் என்று ஒரு தொகுதி தங்க நகைகள் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்டது.

இறுதிக் காலகட்டத்தில் அப்போதைய சந்தைப் பெறுமதிப்படி சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் இருந்ததாக சொல்லப்படுகின்ற போதிலும், அந்தளவு நகைகள் தற்போது காண்பிக்கப்படவில்லை.

அதேபோன்று, நகைகளை அடைவு வைத்தவர்கள் அனைவரும் தற்போது இருக்கின்றார்கள் என்பதற்கோ, இருந்தாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதோ எதிர்பார்க்க முடியாதது.

எனவே, யாதார்தத்தினை புரிந்து கொண்டு நகைகளை அடைவு வைத்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, அவர்கள் அடைவு வைத்த தங்க நகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

அடைவு நகை விவகாரத்தினை வெறுமனவே தேர்தல் வாக்குறுதியாக கடந்து செல்லாமல் விரைவான நடவடிக்கை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் குறித்த கோரிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்>சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் பொறுப்பாளருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp