உள்ளூர்

அடுத்த 36 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்தத் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்திலும், மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்தத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்>வட மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கமைய இந்திய இலங்கை இணைந்த முகாமைத்துவ குழுக் கூட்டம் நடைப்பபெற்றது

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp