உள்ளூர் செய்திகள்

கமால் குணரட்ணவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் ஆவணத்தை ஆதாரங்களுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சிடம் கையளித்துள்ளது

இது தொடர்பில் ஐடிஜேபி மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததை குறிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டியமைக்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணத்தினை மக்னிட்ஸ்கி தடைகளிற்காக பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய சர்வதேவ அபிவிருத்தி அமைச்சிடம் கையளித்துள்ளோம்.

கமால் குணரட்ணவுடன் இணைந்து பணியாற்றிய 58வது படைப்பிரிவின் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்களிற்காக அமெரிக்கா தடை விதித்துள்ளதையும் அவரும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்கு செல்ல முடியாது என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

பிரிட்டனும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

2009 இல் கமால் குணரட்ண சவேந்திரசில்வாவின் கட்டளை தளபதியாக செயற்பட்ட ஜகத்ஜயசூரியவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளதையும் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்.( 2017 இல் லத்தீன் அமெரிக்காவில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இவருக்கு எதிராக சர்வதேச நியாயாதிக்கத்தினை தாக்கல் செய்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.)

(அவுஸ்திரேலியாவிற்கு அவர் பயணம் மேற்கொள்வதை தடுப்பதற்காக குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதையும் தடைகளிற்கான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்)

யுத்த கால பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய இவர்களின் தலைமை அதிகாரி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கனடா ஏற்கனவே தடைகளை விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

மேலும் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கனடா தடைகளை விதித்துள்ளதையும்,சுட்டிக்காட்டியுள்ளோம்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp