உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஆசை நாயகனை கூறிய ஆயுதத்தால் குத்திக்கொன்ற காதலி- கொழும்பில் சம்பவம்

வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (11-05) பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலதர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வீடொன்றில் இடம்பெற்ற தகராறில் நபரொருவர் காயமடைந்த நிலையில், வீழ்ந்து கிடப்பதாக பேருவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவரை மீட்டு, பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பேருவளை, வலதர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். .

சம்பவ தினத்தன்று உயிரிழந்த நபருக்கும் அவரது திருமணத்துக்கு அப்பாலான உறவில் இருந்த பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதைத் தொடர்ந்து, குறித்த பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp