உள்ளூர்

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!

நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் உல்பத்தகம, கல்கிரியாகம, அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர என்ற பொலிஸ் கொஸ்தபிள் ஆவார்.

ஞாயிற்றுக்கிழமை (04) காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொழுது மயக்கம் அடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார  வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர்  மரணம் அடைந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன்  விசாரணைக்கு மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

சடலம்  துணைவியாரிடம்  ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்>உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் யாழில் கள ஆய்வு!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp