உலகம் முக்கிய செய்திகள்

மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்களித்த ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02 ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு வரிகளை அறிவித்தார்.

இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது.

இதேவேளை, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனாவும் பரஸ்பரம் வரி விதிப்பு மேற்கொண்டது.

இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கைப்பேசிகள், கணினிகள் மற்றும் வேறு சில மின்னணு சாதனங்களுக்கு சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் 125 சதவீத வரிகள் உள்ளிட்ட பரஸ்பர வரிகளிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது.

இந்நிலையில், ட்ரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இலத்திரனியல் பொருட்களுக்கு வரி விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான இலத்திரனியல் கருவிகள், தரவு சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>உக்ரைனில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல்:20க்கும் மேற்பட்டோர் பலி!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp