உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். வந்த பிரதமர் தேர்தல் சட்டங்களையும் மீறி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய பக்தர்களையும் குழப்பியதாக சிறிகாந்தா குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தேர்தல் சட்டம் அமுலில் இருக்கிறது. தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறு தேர்தல் திணைக்களம் சகல கட்சிகள் சுயேச்சை குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

அவர் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் நடைபெற்ற போது, ஆலயத்தினுள் அதிரடியாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் புகுந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.

பிரதமரின் பாதுகாப்புக்காக வந்தவர்கள், காலணிகளோடு ஆலய வளாகத்தில் புகுந்துள்ளார்கள். அது இந்து மக்களுக்கு மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மாவிட்டபுரத்துக்கு சென்றது மிக மலிவான தேர்தல் பிரச்சாரத்துக்காகவே, மாவிட்டபுரத்துக்கு கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் வந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கவில்லை.

பிரதமரின் அதிரடி வருகையால் பக்தர்களின் வயிற்றெரிச்சலை தான் பெற்றுச் சென்றுள்ளனர். இந்த மலிவான அரசியலுக்கு நாம் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம்.

இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார், பிரதமர். தனது செயலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்காக பிரதமர் என்ன சொல்லப்போகிறார் ?

அதேபோன்று நேற்றைய தினம் காரைநகர் மற்றும் நீர்வேலி பகுதியில் ஆலய வளாகத்தில் மேடை அமைத்து, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பிரதமர் ஈடுபட்டிருந்தார்.

இவ்வாறான மலிவான அரசியலை நாட்டின் பிரதமர் செய்யக்கூடாது. இங்குள்ள எடுபிடி அரசியல்வாதிகள், சின்ன பிள்ளை அரசியல் செய்பவர்களின் சொல்லை கேட்டு நடக்கக்கூடாது.

வடக்கை நோக்கி பல அரசியல்வாதிகள் உள்ளூராட்சி தேர்தலுக்காக படையெடுத்து வருகின்றனர். அவர்கள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மத தலங்களில் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மலிவான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை அரசாங்கம் கைவிட வேண்டும்.

தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தமது கடமைகளை சரியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp