உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில் பாலியாறு நீர் திட்டத்திற்கு நிதியொதுக்குமாறு சீ.வி.கே. சிவஞானம் கடிதம்

பாலியாறு நீர்வழங்கல் திட்டத்திற்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனினும் தற்போது பரீசினைக்குட்படுத்தி இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கிடு செய்யுமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் முகம்கொடுத்துவரும் நீர்விநியோகப் பிரச்சனை தொடர்பாக தாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறீர்கள் என நான் திடமாக நம்புகிறேன்.

கடந்த ஏழு தசாப்தங்களாக யாழ்ப்பாண மாநகர பிரதேச, தீவக மற்றும் தென்மராட்சி மக்கள் குறிப்பாக நியாயமான சுகாதாரமான நீர் விநியோகத்திற்கு ஏங்கியிருக்கிறார்கள்.

வட மாகாணசபை, யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கான நீர்விநியோகத்துக்கென வருடம் முழுவதும் கடலைச் சென்றடையும் நீரை திசைதிருப்பும் திட்டமாக பாலியாறு நீர்விநியோகத் திட்டத்தை முன்மொழிந்திருந்தது.

அந்தத் திட்டத்தை செலவுச் சிக்கனமான, சாத்தியமான அவசரமான ஒன்றாக பரிசீலித்து ஏற்றுக்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு சிபாரிசு செய்தது.

2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாலியாறு நீர்வழங்கல் திட்டத்திற்கென ரூபா 250 மில்லியன் ஒதுக்கப்பட்டு, திட்டப்பணிமனையும் உத்தியோக பூர்வமாக வெள்ளாங்குளத்தில் 2024 மே மாதம் பதினைந்தாம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் தொடர் நிறைவேற்றலுக்கான நிதி ஒதுக்கீடு எதுவும் 2025ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாமையை ஈட்டு மிகவும் கவலையும் ஏமாற்றமும் அடைகிறோம். இந்தத் திட்டம் கைவிடப்பட்ட மாதிரியான தோற்றப்பாடு காணப்படுகின்றது.

எனவே இந்தத் திட்டத்தின் நிறைவேற்றலுக்கான போதிய நிதியை தற்போது பரிசீலிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்து அதன் துரித நிறைவேற்றத்திற்கான பணிப்புரையை வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp