உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாணவர்களுக்கான இலவச சீருடையை சீனா வழங்கியது.44 இலட்சம் மாணவர்கள் மகிழ்ச்சியில்.

China donates school uniform fabric to Sri Lanka students – Prime Minister Harini Amarasuriya and Chinese Ambassador Qi Zhenhong at handover ceremony

சீனா, இலங்கையின் கல்வித் துறைக்கு தொடர்ச்சியான ஆதரவை உறுதி செய்து, 2026 ஆம்

பாடசாலை மாணவர்களுக்காக 1 கோடி 14 லட்சத்து 84 ஆயிரம் மீட்டர் சீருடை துணியை சீனா இலவசமாக வழங்கியுள்ளது.

5.6 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்தத் துணிகள், 44 லட்சம் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்படுகின்றன.

இன்று நடைபெற்ற உத்தியோகபூர்வ ஒப்படைப்பு நிகழ்வில், சீனத் தூதுவர் சி ஜென் ஹோங், சவால்கள் எதுவாயினும் கல்வி எந்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தினார்.

2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சீனா–உதவி பாடசாலை சீருடை துணித் திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டிற்கான துணிகள் ஐந்து கட்டங்களாக விநியோகிக்கப்படுவதில் மூன்று கட்டங்கள் ஏற்கனவே வந்துவிட்டதாகவும், மீதமுள்ள இரண்டு கட்டங்கள் விரைவில் வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாளை முதல் பொதுக் கல்வித் துறையில் டிஜிட்டல் மாற்றுத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இலங்கையின் முன்னேற்றத்திற்கு சீனா நம்பகமான கூட்டாளியாக தொடரும் எனவும் கூறினார்.

இந்த சீருடை துணி ஒப்படைப்பு நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்விச் செயலாளர் நாலக கலுவேவே உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த உதவியின் மூலம் அரசு மற்றும் அரசுத் ஆதரவு பெறும் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் இலவச பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ளன.

சீனாவின் உதவி கல்வியைத் தாண்டி பல துறைகளிலும் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், டிட்வா உள்ளிட்ட நெருக்கடிகளின் போதும் சீனா வழங்கிய ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp