உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

12 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் இடித்து தள்ளி தப்பிச் சென்ற பெண்! – யாழில் சம்பவம்

பாடசாலை மாணவன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற சம்பவம் வட்டுக்கோட்டையில் நேற்று (22-04) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய மாணவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

வட்டுக்கோட்டையில் உள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு 12 வயதான அப்பாடசாலையின் மாணவன் வழமை போன்று தனது துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.

பாடசாலையின் அருகாமையில் தான் சென்றுகொண்டிருந்தபோது தனக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவர், தன்னை மோதியதால் துவிச்சக்கரவண்டியுடன் தான் வீதியில் விழுந்துவிட்டதாக மாணவன் தெரிவித்துள்ளான்.

அத்துடன் விபத்தில் சிக்கி காயங்களுடன் வீழ்ந்து கிடந்த தனது நிலையை பொருட்படுத்தாமல் அந்தப் பெண் மோட்டார் சைக்கிளை செலுத்தி, தப்பிச் சென்றதாகவும் மாணவன் குறிப்பிட்டுள்ளான்.

அதன் பின்னர், பாடசாலையின் முன்பாக வீதிப் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிரேஷ்ட மாணவர்கள் வீதியில் வீழ்ந்து கிடந்த தன்னை தூக்கிச் சென்று முதலுதவு அளித்ததாகவும், தான் விபத்தில் சிக்கியமை தொடர்பாக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோருக்கு தெரியப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் மேலும் கூறியுள்ளான்.

விபத்தில் சிக்கி கையில் எலும்பு முறிவும் காயமும் ஏற்பட்ட நிலையில், மாணவன் உடனடியாக சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நிறைவுறும் நேரங்களில் அப்பகுதியில் போக்குவரத்துப் பொலிஸார் வீதி போக்குவரத்துக் கடமையில் வழமையாக ஈடுபட்டுவரும் நிலையில், கடந்த சில நாட்களாக போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் இல்லாததை அவதானிக்க முடிகிறது என மாணவர்களும் பொதுமக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp