உள்ளூர் செய்திகள்

வேட்பு மனுக்கல் நிராகரிக்கப்பட்ட கட்சிகள் எம்மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல- அமைச்சர் சந்திரசேகரம்

யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்ற வேட்புமனுத் தாக்கலின்போது சதி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேட்பு மனு நிராகரிப்பில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சில தரப்பினர் குற்றம் சாட்டியமை தொடர்பில் கருத்து வெளிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிலரது குற்றச்சாட்டை பார்க்கிறபோது அவர்களின் வேட்பு மனு தயாரிப்பில் அவர்களின் அலுவலகங்களிற்கு நாங்கள் சென்று ஏதோ திருகு தாள வேலைகளை செய்ததுபோல அவர்களது குற்றச்சாட்டுக்களில் தெரிகிறது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் என்பது வெற்றுக் கதைகள் மட்டுமே ஆகும்
ஆகவே வெறும் கதைகளை யாரும் கதைக்க தேவையில்லை.
எங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.

தாங்கள் தவறுகளை இழைத்துவிட்டு எங்கள் மீது குற்றஞ்சாட்டுகிற இந்த மாதிரியான கூற்றுக்களுக்கு நாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை.

இங்குள்ள ஒரு சபை கூட நிராகரிக்கப்படாமல் 17 சபைகளிலும் சரியாக செய்து தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருப்பதென்பதை இவர்களால் பொறுத்துக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியவில்லையென கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டள்ளார்

அதனாலேயே தேவையில்லாத விமர்சனங்களை செய்கின்றனர் என தெரிவித்த அவர் எது எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதியானது என அவர் மேலும் தெரிவித்தார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp