வெனெசுலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சீலியா ஃப்ளோரஸ் அமெரிக்காவில் புதிய வழக்கில் கைதாக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நீதித்துறை மதுரோவை ‘பொதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஊழலான அரசாங்கத்தை நடத்தியவர்’ என்று குற்றம்சாட்டியுள்ளது.
இவர் கோக்கைன் இறக்குமதி, பயங்கரவாத நடவடிக்கை, ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகள் வைத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தியுள்ளது.
வழக்கில் மதுரோவின் மனைவி, மகன் மற்றும் மூன்று உதவியாளர்கள் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டின் படி, மதுரோ போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து, ஆண்டுதோறும் 250 டொன் கோக்கைன் போதைப்பொருளை அமெரிக்காவுக்கு கடத்தியதாக அவர் மீது அமெரிக்கா குற்றமத் சுமத்தியுள்ளது.
மதுரோ மற்றும் அவரது குடும்பம் கும்பல்களுக்கு சட்டப்படி அனுமதி கொடுத்ததாகவும், போதைப்பொருள் பரப்பும் நடவடிக்கைகளை ஆதரித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா மேலும் கூறுகிறது, மதுரோ மற்றும் அவரது மனைவி கடத்தல்காரர்கள் பணம் திருப்பிச் செலுத்தாத போது கடத்தல், தாக்குதல் மற்றும் கொலை ஆகியவற்றிக்கு கட்டளையிட்டதாக அமெரிக்கா குற்றங்களை அடுக்கியுள்ளது.
