உள்ளூர் செய்திகள்

வியாழேந்திரனும் பிள்ளையானும் மக்களை மக்களை புதைக்கப்போகின்றார்கள் விமலசேன லவக்குமார் தெரிவித்துள்ளார்

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான்இ கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபோவார்கள் அல்ல மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடுவதற்கா நேற்று புதன்கிழமை (19) பழைய கச்சேரியில் வேட்புமனுதாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச சபையில் 14 வட்டாரத்திலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை எனது தலைமையில் களமிறக்கியுள்ளேன். கிராமங்களின் அபிவிருத்தியை மேற்கொள்ளும் ஒரு தேர்தல் இதில் வெற்றிபெறும் வேட்பாளர் 900 மீற்றருக்குள் இருக்கின்ற ஒரு வீதியை புனரமைக்க முடியும் குறிப்பாக பிரதேச சபை எல்லைக்குள் உள்ள அடிப்படை தேவைகளை செய்து முடிக்கமுடியும்.

அப்படிச் செய்வோம் இப்படிச் செய்வோம் என பிரச்சாரங்களை செய்வார்கள் இந்த காலங்களில் துரஸ்டவசமாக ஒட்டுக்குழுக்களாகவும் பயங்கரவாத கழுக்களாகவும் செயற்பட்டு பல கொலைகளை செய்த குழுக்கள் இந்த தேர்தல் காலத்தில் ஒன்றாக இணைந்துள்ளனர்.

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தொடர்பாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தொடர்பாகவும் பல விமர்சனங்கள் உண்டு இவர்கள் எல்லாம் மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இந்தமுறை போட்டியிடுகின்றனர்.

எனவே மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் இவர்கள் மக்களின் இருப்புக்களை சுரண்டி எத்தனையோ உயிர்கள் பறித்தவர்கள் கடந்தகாலத்தில் புலிகள் இருந்தகாலத்தில் பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளில் இருந்து பிள்ளையான் கருணா பிரிந்தபோதுதான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் மாவட்டத்திலுள்ள அநேகமானவர்கள் பறிகொடுத்து உறவுகளாகஇ தாய் தந்தைகளாகஇ சகோதர்களாக இருக்கின்றோம் எனவே மக்கள் விழிப்போடு இந்த தேர்தலில் செயற்படவேண்டும் என்றார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp