உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வியட்நாமையும் இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் வியட்நாமில் உள்ள வின்குருப் குழுமத்தின் உயர் நிர்வாகத்தைச் சந்தித்து கலந்துரையாடினார்.

வின்குருப் குழுமத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், இலங்கையில் ஆதன வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு வின்குருப் குழுமத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

வின்குருப் நிறுவனத்தின் வெற்றி மற்றும் பல்வேறு உலகளாவிய வர்த்தகநாமங்களின் உருவாக்கத்திற்கும் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கையில் முதலீட்டிற்கு நெகிழ்வான மற்றும் உகந்த சூழலை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது என்று வலியுறுத்தினார்.

இலங்கையின் மூலோபாய புவியியல் இருப்பிடம், முற்போக்கான உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்தி மற்றும் குறிப்பாக சுற்றுலாத்துறை, ஆதன வர்த்தகம் போன்ற அதிக திறன் கொண்ட துறைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

1993 ஆம் ஆண்டு உக்ரைனில் நிறுவப்பட்ட வின்குருப் குழுமம், அதன் முன்னாள் பெயர் ‘டெக்னொகொம் கோர்ப்பரேஷன்’ (ஏiபெசழரி) இப்போது வியட்நாமில் மிகப் பாரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க தனியார் நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த கலந்துரையாடலில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வின்குருப் குழுமத்தின் உப தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வியட் குவாங் ஆகியோர் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் பங்கேற்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp