உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியா கூமாங்குள சர்ச்சைக்குரிய மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாம்

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மரணித்தவர் மாரடைப்பு காரணமாகவே மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை நேற்றையதினம்(14.07) வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.

இதன்போது, அப்பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே குறித்த மரணத்திற்கு காரணம் என தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற பொலிஸார், மீது அப்பகுதியில் குழுமி இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 5 பொலிஸார் காயமடைந்ததுடன், பொலிஸாரின் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் கப் ரக வாகனம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் மரணித்தவரின் உடற்கூற்று பரிசோதனை வவுனியா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்ன முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மரணித்தவரின் உடலில் புதிய காயங்கள் எதுவும் இல்லை எனவும் வலது காலில் பழைய வடுக்கள் காணப்படுகின்றது எனவும் இதயத்தின் முன் புறப்பகுதியில் கடுமையான இரத்த உறைவு உருவாக்கம் காணப்படுகின்றது எனவும் இதயத்தின் தசைப்பகுதி மற்றும் இரத்த மாதிரி கொழும்புக்கு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மாரடைப்பு காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp