உள்ளூர் செய்திகள்

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளம் குடும்பஸ்த்தாரின் சடலம் மீட்பு

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இரத்தக்கறைகளுடன் இளம் தந்தை ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
வீடொன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா காத்தார்சின்னக்குளத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா குற்றப்பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp