உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மாள் ஆலய மகா சங்காபிஷேகம்..!

தேசத்து ஆலயமாக விளங்கும் வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மாள் ஆலய மகா சங்காபிஷேகம் நேற்றையதினம்(24.03.2026) இடம்பெற்றது.

மேற்படி சங்காபிஷேகமானது ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்களின் வழிகாட்டலில் 108 சங்குகளுடன் சங்காபிஷேக கிரிகைகள் ஆலய குரு சிவஸ்ரீ கோபர்த்தனக்குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ சபாரெத்தினக் குருக்கள், சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் ஒத்துழைப்புடன் சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்களிற்கு மீனாட்சி அம்மாளின் திருவுருவப்படங்கள் வழங்கப்பட்டன.

காரைதீவு இசைக்கலைஞர் விபுலமணி இ.கோபாலசிங்கத்தின் 33அம்பிகையின் பாடல்கள் அடங்கிய “தெய்வீககானங்கள்” இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றன.

ஆலயத்தின் தலைவர் கி.ஜெயசிறில் தலைமையிலான ஆலய நிர்வாக உறுப்பினர்கள், பக்த அடியார்கள் கலந்து கொண்டதுடன், அன்னதானமும் வழங்கப்பட்டன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp