செய்திகள்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது – தெரிவத்தாட்சி அலுவலர்.

e0aeb5e0aea9e0af8de0aea9e0aebf e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4e0aebf | Pathivu News

 

 

Pathivu Newsநாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ. சரத்சந்திர தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
இதுவரை வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா தோதல் தொகுதியில் எட்டு முறைப்பாடுகளும், மன்னார் தோதல் தொகுதியில் எட்டு முறைப்பாடுகளும், முல்லைத்தீவு தோதல் தொகுதியில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது.

பாரதூரமான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லையெனவும் தேர்தலில் வாக்களிப்பதற்காக வன்னிமாவட்டத்தில் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 182 நிலையங்களும் மன்னார் 98, நிலையங்களும் முல்லைத்தீவில் 137 நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது.

வவுனியாவில் வாக்கெண்ணும் மத்தியநிலையமாக சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியும், மன்னாரில் மாவட்டச் செயலகமும், முல்லைத்தீவு மத்திய மகாவித்தியாலமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் 30,6081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வவுனியாவில் 128,585 பேரும் முல்லைத்தீவில் 86,889 பேரும் மன்னாரில் 90,607பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ. சரத்சந்திர தெரிவித்தார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp