உலகம்

வட கொரியா விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்துள்ளது

விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சிகளை தொடர்ந்து வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

ஏவுகணை சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேரில் மேற்பார்வையிட்டதாக வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய ஏவுகணை சோதனை அந்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி முகாமின் இறுதிநாளில் வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து 11 நாட்கள் வரை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன.

இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டு ராணுவ பயிற்சி குறித்து பேசிய வட கொரிய செய்தி தொடர்பாளர் ஒருவர், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp