உள்ளூர் செய்திகள்

ரவிராஜ் கொலை சந்தேகநபர் – இரசாயனக் கிடங்கு வழக்கில் கைது.

தென்னிலங்கையின் மித்தெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனக் கிடங்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் படுகொலை சந்தேகநபர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான பியல் மனம்பேரி ஆவார். 2006ஆம் ஆண்டு கொழும்பு நாரஹேன்பிட்டியில் நடந்த ரவிராஜ் படுகொலைக்காக இவர் மீது சந்தேகத்தின் பேரில் அப்போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததோடு, குறிப்பாக கோத்தபாய மற்றும் நாமல் ராஜபக்சவின் நெருங்கிய சகாவாக அடையாளம் காணப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.

மித்தெனிய, தலாவ பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கொள்கலன்களில், ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க தேவையான இரசாயனங்கள் இருந்ததாகவும், அவை ஈரானின் தெஹ்ரானில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் புலனாய்வு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அமெரிக்க புலனாய்வு அமைப்பு முன்கூட்டியே இந்த அனுப்புகையை இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரித்திருந்ததாகவும், குறிப்பிட்ட கொள்கலன் எண்களுடன் தகவல் வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரசாயன கொள்கலன்களை நாட்டிற்கு தருவித்ததாகக் கூறப்படும் பியல் மனம்பேரி இவ்வழக்கில் கைதாகியுள்ளார்.

இதையும் படியுங்கள்>சிவில் விமான ஆணையத்தின் உயர்மட்ட பதவிகளுக்கான நியமனத்தில் அரசியல் தலையீடென ஊழல் எதிர்ப்பு அமைப்பு குற்றச்சாட்டு

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp