உள்ளூர்

ரயில் இயந்திரத்தில் தீப்பரவல்

களுத்துறையில் இருந்து மருதானைக்கு இயக்கப்படவிருந்த ரயிலின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக  கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது..

இன்று (15) காலை 7 மணியளவில் களுத்துறையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த ரயில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தீப்பிடித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயிலின் பின் இயந்திரத்தில் தீ பரவியதையடுத்து களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த ரயிலில் இருந்த பயணிகள் மற்றுமொரு ரயில் மூலம் மருதானைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கரையோர மார்க்கத்தில் சிறிது ரயில் தாமதம் ஏற்படும் எனவும்திணைக்களமேலும்தெரிவித்துள்ளது

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp