யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல்!
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் இன்றைய தினம் (07.04.2026) பி. ப. 02.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி தாரணி கஜரூபன் ஆகியோரது இணைத் தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தொடக்கவுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர்,
யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரிவுகளையும் உள்ளதாகியதான அங்கத்தவர்களையும் உள்ளதாக்கியதாக பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளை தீர்த்து வைக்கும் நோக்கில் இக் கலந்துரையாடல் கூட்டப்படுகிறது. இங்கு முன்வைக்கப்படும் விடயங்களுடன் தொடர்புடைய திணைக்களங்கள் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்படுகிறது. இதன் ஊடாக கடந்த காலங்களில் பல விடையங்களுக்கு தீர்வுகள் எட்டப்பட்டன எனவும், சில பிரச்சினைக்கள் தொடர் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், எங்களது விடயங்களுக்கு அப்பாற்பட்ட கடினமான விடயங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன எனவும், ஒட்டுமொத்ததித்தில் இனங்காணபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு சிறந்த செய்யற்றிட்டமாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், இங்கு பிரச்சினைகளுடன் தொடர்புடைய திணைக்களங்கள் அழைக்கப்படும் போது அதற்கு பதில் வழங்கக்கூடிய வகையில் தொடர்புடைய திணைக்களத் தலைவர்கள் தீர்வுகளை அறிந்து வரவேண்டும் எனவும் அல்லது தகவல்கள் உரியவாறு சென்றடைய வேண்டும் எனவும், இவற்றின் ஊடாக தீர்மானங்கள் எட்டப்பட வேண்டும் எனவும், இவை தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதன் ஊடாக இக் கலந்துரையாடல்களின் உண்மையான நோக்கம் நிறைவேறும், என தெரிவித்தார்.
இதன்போது கடந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
தொடர்ந்து சமூகத்தில் அடையாளம் காணப்பட்டு இதுவரை தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து குடிசார் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்றைய ஊராட்சி முற்றத்திற்கு முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், அவற்றிற்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களால் வழங்கப்பட்டன.
இக் கூட்டத்தில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி கி தயாபரி, பிரதேச செயலாளர்கள், தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகள், கிறிசலிஸ் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், விடைய உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.


What’s your Reaction?
