முக்கிய செய்திகள்

யாழ். பல்கலையில் 24 வது ஆண்டு பொங்குதமிழ் பிரகடனத்தின் எழுச்சிநாள் நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்குதமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபிக்கு முன்பாக நடைபெற்ற பொங்குதமிழ் பிரகடன உரையினை தொடர்ந்து, பொங்குதமிழ் தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் மாணவர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும் என பொங்குதமிழ் பிரகடனம் இன்று (17.01.2001) செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp