செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் இணுவில் பகுதியில் தாயின் முன்னிலையில் இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல் தலைமறைவு பொலிஸார் அசமந்தம்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி ,தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரின் விளக்கமறியலை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்துள்ளார்.

இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் காணொளியாகவும் மற்றும் புகைப்படங்களாகவும் பதிவு செய்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கோப்பாய் காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ் , நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 பேர் வரையில் காவல்துறையினர் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் இதுவரை முன்னெடுக்கவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp