உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 4 சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டியிடுவதென கஜேந்திரகுமார் தெரிவிப்பு

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக எமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக எமது கட்சியை சார்ந்தவர்கள் போட்டியிடுவார்கள். ஏனைய சபைகளில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் உள்ள கட்சிக்கு ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் நாம் அவற்றை வழங்குவோம்.

ஆனாலும், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக எம்முடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளாமல் இலங்கை தமிழ் அரசு கட்சி ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கோரியிருந்தபோதும், பங்காளிக் கட்சிகளுடன் பேசி முடிவை அறிவிப்போம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp