யாழ்ப்பாணம் மாநகரம், தாவடி பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் 10 கோடி ரூபா மதிப்புள்ள 2 கிலோ கிராம் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலீஸ் விசாரணையில், இந்த திருட்டில் ஈடுபட்டவர், கடையில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் என கண்டறியப்பட்டுள்ளது.
சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடி, அவற்றை மறைத்து விற்பனை செய்துள்ளதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலீஸ் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், குறித்த பெண்ணை ஜனவரி 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
பொலிஸார், திருட்டு சம்பந்தப்பட்ட சான்றுப்பொருட்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது யாழ் மாநகரின் நகைக்கடை தொழிற்சங்கங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
