உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்படும்

விண்ணப்பிக்கப்ட்டுள்ள அனைத்து கடவுச்சீட்டுகளும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்று கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்றத்தின் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தில் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரான ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளமையை அமைச்சர் உறுதிப்படுத்தியதுடன், தேவையான அச்சிடும் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டவுடன் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் நிறுவப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் உள்ளூராட்சி சபை அலுவலகங்களில் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்கப்படும் என்பதையும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp