உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய திட்டத்தின் எட்டாவது அமர்வு இன்று யாழ்ப்பாணம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த அமர்வில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், மாகாண கல்விச் செயலாளர் பற்றிக் டிரங்கசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கல்விப்புலம் சார்ந்த அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

2026ஆம் ஆண்டு முதல் நாட்டின் பாடசாலைக் கல்வி முறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே, கல்விச் சமூகத்தின் கருத்துகளை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களின் தொடரில் இந்த அமர்வும் இடம்பெற்றது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp