உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளநீர் குடித்த 31 வயதுடையவர் கோவிலில் உயிரிழப்பு

குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29-06) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார்.

அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயக்கி விழுந்துள்ளார்.

அதன் பின்னர் அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp