உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் தமிழரசு கட்சியின் உயர்மட்ட குழு இன்று கூடியது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் சி.வீ.கே. சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களுடன், இனப் பிரச்சினை தொடர்பான விடயங்களை கையாளுவதற்காக தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும் கூட்டத்தில் பங்கேற்றது.

பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சி. சிறீதரன், ஞா. சிறீநேசன், க. கோடீஸ்வரன், து. ரவிகரன், இ. சிறீநாத், ப. சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் கே. துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. சயந்தன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp