முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு கிராமங்களான தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் இரண்டும் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகைக்கள் இருக்கும் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமக்களை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே அவர்; இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம்ஆகியகிராமங்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படவில்லை.

தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தஇடங்களில் மீள்குடியேறுவதற்குத் தயாராக இருக்கின்றனர்.

குறித்த கிராமங்களைச்சேர்ந்த மக்கள் தம்மை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு என்னிடமும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு அப்பகுதிகளிலிருந்த மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்தனர்.

இருப்பினும் அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே புதிய அரசாங்கமானது தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமமக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் கூடிகவனஞ்செலுத்தவேண்டும். அவர்களை மீள்குடியேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp