உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லையென எஸ்.சிறீதரன் அறிவித்துள்ளார்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வந்தது.

நாங்களும் அதற்கு எதிர்ப்பு இவ்வாறான இழுபறியில் மாகாண சபை தேர்தல் உள்ளது. இவ்வாறானதொரு சூழ் நிலையில் மாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு தயாரில்லை கட்சி வழக்கில் உள்ளது.

கட்சியில் உள்ளவர்களே வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றனர். தாயினை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பது போலுள்ளது.

பால் அருந்த போகின்றோம் என்று சொல்வது இனவிடுதலைக்கான அரசியல் அல்ல நாங்கள் செய்வது பதவிகளுக்கான அரசியல் அல்ல இனவிடுதலைக்கான அரசியல் பதவிகளுக்கு அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும்.

இவ்வாறான சூழல் இருக்கும் போது நான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் இல்லை என்றார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp