உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மருத்துவர்கள் பேச்சுவார்த்தை தவிர்த்தால் நடவடிக்கை தீவிரம்

அரசாங்கம் எந்தவொரு தொழிற்சங்க அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணியாமல், தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கப்போவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையில் மனிதவள பற்றாக்குறையை குறைத்து மக்களுக்கு தரமான சேவை வழங்குவதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும் என அவர் குறிப்பிட்டார்.

இதை அவர் சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 213 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் வெளியிட்டார்.

அரசு, வெளிநாடுகளில் அதிக சம்பளக் கோரிக்கைகளை முன்வைத்து நாட்டை விட்டு வெளியேறப்போதாக மிரட்டும்  எந்தவொரு தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்கப்போவதில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இதேவேளை, சில மருத்துவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வராமல், மீறி நடவடிக்கைகள் மேற்கொண்டால், எதிர்வரும் முதலாம் திகதி தொழிற்சங்கங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசேகர இதனை உறுதிப்படுத்தினார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp