உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னார் மண்ணுக்காக களத்தில் இளையோர், கைவிடப்படுமா திட்டம்?

மன்னாரில் சர்வதேச நிறுவனங்கள் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரி, இளைஞர்கள் குழு இரண்டு நாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது.
இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு தலைமையில், ஆகஸ்ட் 6ஆம் திகதி மன்னார் சுற்றுவட்டத்தில் தொடங்கிய பேரணி நகர வீதிகளில் சென்று மீண்டும் போராட்டக் களத்துக்கு திரும்பியது.

கனிய மணல் அகழ்விற்காக வழங்கப்பட்ட அனுமதிகளை இரத்து செய்யவும், எதிர்கால அனுமதிகளை வழங்காதிருப்பதையும், சுற்றுச்சூழல் தொடர்பான முடிவுகளில் மக்களின் கருத்துக்களை வெளிப்படையாகப் பெறுவதையும் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் மகஜருக்காக கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன.

‘கருநிலம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற போராட்டத்தில், ‘மக்களின் நிலம் மக்களின் உரிமை’ மற்றும் ‘மன்னார் மண்ணை பாதுகாப்போம்’ போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டில் மக்களின் ஆலோசனைகள் அவசியம் என வலியுறுத்தினர்.

முன்னதாக நவம்பர் 2024 மற்றும் மே 2025 இல், கனிய மணல் அகழ்விற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வந்த அரச அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களை உள்ளூர் மக்கள் எதிர்த்து அனுப்பியிருந்தனர்.
2025 நவம்பர் 6ஆம் திகதி, டைட்டேனியம் அகழ்விற்கான மாதிரிகள் எடுப்பதற்காக வந்த 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் நிறுவன பிரதிநிதிகள் எதிர்ப்புக்கு உள்ளானார்கள்.

அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட டைட்டேனியம் சேன்ட்ஸ் நிறுவனம், வருடாந்தம் 1.5 இலட்சம் தொன் கனிய மணலை அகழ்வதற்குத் திட்டமிட்டுள்ளது.
122 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம், 600 உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp