உள்ளூர் செய்திகள்

மன்னாரில் காற்றைக் கொண்டு மின் உற்பத்தி செய்யபப்டும் -ஜனாதிபதி அநுர குமார

மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், காற்றைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னார் பஜார் பகுதியில் இன்று காலை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

சுமார் 5 – 6 வருடங்களுக்கு பின்னர், இலங்கையில் ; மிகப் பாரிய அளவிலான டொலர் கையிருப்பில் உள்ளதாக தெரிpவத்த ஜனாதிபதி கடந்த 6 மாதங்களாக ரூபாவின் மதிப்பு சரியவில்லையென குறிப்பிட்டள்ளாhர்

மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபடுவதாகவும் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்

அத்துடன் மன்னாரில் காற்றைக் கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது.

ஆனால், கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இந்த மின் உற்பத்தி திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அஸ்வெசும உதவித்தொகை அதிகரிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், அடுத்த ஜூன் மாதம் முதல் 400,000 புதிய குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளாhர்

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைகள் வழங்கப்படுகின்றன.
300க்கும் குறைந்த எண்ணிக்கையுடைய மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு காலணிகள் வாங்க பணம் வழங்கப்படுகிறது.
1.6 மில்லியன் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய தலா 6,000 வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துளாளார்

அது மாத்திரமல்லாமல், 5 – 6 வருடங்களுக்கு பின்னர் தற்போது 30ஆயிரம் பேரை அரச சேவையில் சேர்க்கவுள்ளதாக தெரிpவத்த ஜனாதிபதி இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பின்னால் செல்லவேண்டிய அவசியமில்லையென சுட்டி;ககாட்டியுள்ளார்

பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தும் போது அதன்படி பரீட்சைக்கு தோற்றி அதிக புள்ளிகளைப் பெற்று வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளுமாறு ஸனாதிபதி தெரிவித்துளார்

இந்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp