உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாணவியெருவர் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் குழந்தையை வீசியுள்ளார்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது,

18 வயதுடைய மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணி என்பதை மறைத்து வயிற்று வலி என தெரிவித்து சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் மட்டு. போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியர் சரியான முறையில் சோதனையிடாத நிலையில் மாணவிக்கு ஊசி மூலமாக வயிற்று வலிக்கான வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் மாணவி மலசல கூடத்திற்கு சென்று குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசியுள்ளார்.

குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்ற போதே மாணவி குழந்தையை பெற்றுள்ளார் என அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குழந்தை மீட்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், தாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த குழந்தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp