முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்; மழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு நவகரி பிரதேசத்தில் 92 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வாகரை, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, ஏறாவூர் உட்பட பல பிரதேச செயலக பிரிவுகளில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்யும் என மாவட்ட வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது

 

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp