இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 128வது சிரார்த்த தின நிகழ்வு இன்று 31.03.2026 மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் தலைவரும் மாநகர முதல்வருமான சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் இரா.சாணக்கியன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் பலரும் கலந்துகொண்டனர்.
அஞ்சலி நிகழ்வில் விசேடமாக நினைவுப்பேருரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியர் புஸ்பராஜா நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் மகளிர், இளைஞர் அணி உறுப்பினர்கள், மாவட்ட கிளை,பிரதேச கிளைகளின் முக்கியஸ்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

