உள்ளூர்

மடு அன்னையின் ஆடி மாதத் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மடு அன்னையின் ஆடி மாதத் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (26) மதியம் மடுத் திருத்தல கேட்போர் கூடத்தில் இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பேரருட் திரு. கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் அகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு தொடர்பாக உரிய தரப்புடன் கலந்துரையாடப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து நவநாள் திருப்பலி தமிழ் சிங்கள மொழிகளில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் 2 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்க உள்ளனர்.

இதில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் மடு அன்னையின் ஆசி பெற வருகை தர உள்ளமையினால் சகல விதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ், கடற்படை மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>யாழ் செம்மணியில் புதிதாக மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு..!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp