தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் கோரிக்கையின் பயனாக மகிழங்கேணி-லிகோரியார் இணைப்பு வீதி தார் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் திரு சத்தியசோதி அவர்களிடம் கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் நேரடியாக விடுத்த கோரிக்கையின் பயனாக சுமார் 300மீட்டர் நீளம் கொண்ட இணைப்பு வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி இணைப்பு வீதியை புனரமைப்புச் செய்ய வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மக்களின் தேவைப்பாடு கருதி கிராம அபிவிருத்திச் சங்கம் பிரதேச செயலர் ஊடாக மேற்படி வீதி அபிவிருததிப் பணியை நிறைவு செய்திருப்பதாக கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


