முக்கிய செய்திகள்

மகிந்தவின் 2 வது புத்தாவுக்கு 27 ம் திகதி வரை விளக்கமறியல்

யோசித ராஜபக்ஸவை புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீதவான் உத்தரவிட்டார்.

பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ஸ இன்று (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோசித ராஜபக்ஸவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

 

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp