போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சுமார் 500 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரிகளில் சிலரை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கொழு;பில் அமைந்துள்ள பஹலகம காவல்துறை பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி காவல்துறை அதிகாரிகளின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
