மீளப் பெறப்பட்ட தனது பாதுகாப்பு பிரிவை மீள வழங்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த வழக்கு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது
மீண்டும் விடுதலைப் புலிகளின் ஒன்று கூடி எழுச்சி பெறுவது தொடர்பான தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி வசம் இருக்குமாயின் அவற்றை நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு குறிப்பிட்டார்.

