உள்ளூர் செய்திகள்

புலம் பெயர் தமிழ் மக்களுக்கு அரச தரப்பில் ஆதரவு வழங்குவதாக சரத் வீரசேகர குற்றச்சாட்டு

”யுத்தக் குற்றம் செய்துள்ளோமென்ற குற்றச் சாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கருத்துகளை முன்வைத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாட்டைக் காட்டிக்கொடுத்து வருகிறார்.

தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தக் குற்றம் இடம்பெறவில்லையென்பதை நிபுணர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பிமலின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
விடுதலைப் புலிகள் தமிழ் டயஸ்போராவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே அவரின் கருத்துகள் அமைந்துள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நேற்று (19-05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைத்தார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

”பல்லாயிரம் மக்களின் உயிர்களைப் பறிகொடுத்து, சொத்துகளை இழந்து முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து 16 வருடங்கள் நிறைவடைகின்றன.
எமது இராணுவ வீரர்களும் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.

14,000 வரையான இராணுவத்தினர் அங்கவீனமுற்றுள்ளார்கள். எனவே, இது தமிழ் மக்களுடனான போராட்டம் அல்ல.
நாட்டைப் பிளவுபடுத்துவதற்காக செயற்பட்ட விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளுடனேயே நாங்கள் போராடினோம்.
அதேபோன்று தேசத்தின் மீது நேயமிக்க மக்கள் இருக்கும்வரை நாட்டைப் பிளவுபடுத்த இடமளிக்க மாட்டார்கள்.

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாகத் தெரிவித்தே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினர் ஆட்சிக்கு வந்தார்கள்.
தற்போதுள்ள அரசியலமைப்பில் பிரதானமாக இரண்டு விடயங்கள் இருக்கின்றன.

ஒருவிடயம் இந்த நாடு சமயமில்லாத நாடாக வேண்டும். அதேபோன்று இந்த நாடு பெடரல் நாடாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு எமது நாடு பெடரல் நாடாகினால் இராணுவ வீரர்கள் தினத்தை அனுஷ்டிப்பதில் எந்தப் பலனும் இல்லை.
இந்த நாடு ஐக்கியமாக இருந்தால் மாத்திரமே இராணுவத்தினரின் அர்ப்பணிப்புக்கு மதிப்பு கிடைக்கும்.

ஜெனீவாவில் தற்போது வெளிபொறிமுறையொன்றை வலியுறுத்தியுள்ளது.
41ஃ6 என்ற யோசனையில் அதனை நிறைவேற்றியுள்ளது.

அதில் யுத்தத்துக்கு அரசியல் தலைமைத்துவம் மற்றும் யுத்த தலைமைத்துவத்தை வழங்கியவர்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்துவதற்காக தற்போதும் சாட்சிகள் திரட்டப்பட்டு வருகின்றன.

இதனை முன்னாள் அரசாங்கங்கள் நிராகரித்திருந்தாலும் தற்போது அது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அரசியல் தலைமைத்துவம் தொடர்பில் ஏன் அவர்கள் அதிக கரிசனை செலுத்துகிறார்களென்றால், யுத்தமொன்றின் வெற்றியையும் தோல்வியையும் அரசியல்வாதிகளே பொறுப்பேற்கிறார்கள். எனவே, யுத்தம் செய்வதா இல்லையா என்பதை யும் அரசியல்வாதிகளே தீர்மானிக்கிறார்கள்.

யுத்தம் என்பது அரசியலின் தொடர்ச்சியாகும். யுத்தமின்றி அரசியல் செய்யமுடியும். ஆனால், எப்போதும் அரசியல்வாதிகளின்றி யுத்தமொன்றை முன்னெடுக்க முடியாது. பட்டலந்த வதைமுகாமில் சிங்கள மக்களையே இவ்வாறு சித்திரவதைச் செய்திருப்பார்கள் என்றால் யுத்தக் காலத்தில் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்கள் என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இது இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைக்கப்படும் தேசத்துரோக யுத்தக் குற்றங்கள் மீதான வெளி பொறிமுறையை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே அமைந்துள்ளது.
இதனூடாக, யுத்தக் குற்றம் செய்தோமென்று தமிழ் மக்களைக் கட்டாயமாக அல்லது எந்தவொரு காரணமுமின்றி கொலைசெய்தோம், அவர்களை சித்திரவதை செய்தோம் என்றும் வேண்டுமென்றே சாட்சியளிப்பது போன்றதாகும்.

இலங்கைக்கு எதிரான தேசத்துரோக பொறிமுறையை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது. காரணம், பாராளுமன்றத்தில் பேசும் ஒவ்வொரு உரையும் ஹன்சாட்டில் வெளியிடப்படும். அவ்வாறு ஹன்சாட்டிலிடப்பட்டதன் பின்னர் நாங்கள் யுத்தக் குற்றம் செய்துள்ளோமென்ற குற்றச்சாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகிவிடும். இதுவே மிகப் பெரிய காட்டிக்கொடுப்பாகும்.

எனவே, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சபை முதல்வர் எங்கிருந்தாரென்பது தெரியவில்லை. அந்தக் காலப்பகுதியில் பிமல் ரத்நாயக்க இங்கிருந்திருக்காவிட்டால் 22 இலட்சத்து 95 ஆயிரம் தமிழ் மக்களைப் பாதுகாத்துக்கொண்டே இந்த யுத்தத்தை வெற்றிகொண்டோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறோம்.

யுத்தகாலத்தில் எந்தவொரு யுத்தக் குற்றமும் இடம்பெறவில்லை என்பதுடன், அப்பாவி தமிழ் மக்களை சித்திரவதை செய்யவும் இல்லை, கொலை செய்யவும் இல்லை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். அவ்வாறிருக்கையில், பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் ஏன் இவ்வாறு கூறுகிறார். விடுதலைப் புலிகள் தமிழ் டயஸ்போராவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறியிருக்கிறார்.

இவர் இதற்கு முன்னரும் இலங்கை சிங்கள பௌத்த நாடு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான நிலைப்பாடுகளைக்கொண்ட பிமல் தற்போது நாட்டைக் காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
கனடாவில், தமிழ் இனப்படுகொலையை எதிர்த்துப் போராட்டம் செய்து அதற்காக நினைவுத்தூபியையும் அமைக்கிறார்கள். எனவே, பிமல் ரத்நாயக்கவின் இந்தக் கருத்து அதற்கு ஒத்துழைப்பை வழங்கியுள்ளதென்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை” என்றார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp