உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரித்தானியா இலங்கைக்கு வர்த்தக சலுகையை வழங்கியுள்ளது.

இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு பிரித்தானிய அரசு முக்கிய வர்த்தக சலுகையை வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

பிரித்தானிய அரசு அறிவித்துள்ள தளர்த்தப்பட்ட வர்த்தக விதிகளின் கீழ், இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் உலகின் எந்த நாட்டிலிருந்தும் நூறு சதவீத மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், முன்னர் நடைமுறையில் இருந்த பிராந்திய மூலப்பொருள் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிமுறைகளின் கீழ், இலங்கை ஆடை உற்பத்திகளுக்கு பிரித்தானிய சந்தையில் சுங்க வரியில்லா அணுகல் தொடர்ந்தும் வழங்கப்படுவதால், இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு பெரும் நன்மை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதி சந்தையாக பிரித்தானியா காணப்படுவதுடன், அந்த நாட்டுக்கான ஆடை ஏற்றுமதி பெறுமதி சுமார் 675 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp