உள்ளூர் செய்திகள்

பிரதமர் பதவியில் மாற்றமா? மனம் திறந்தார் பிரதமர் ஹரிணி

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசில் குழப்பம் உள்ளது என எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி ஆட்சியை பிடிக்கக் கூடாது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் மக்கள் அளித்த அமோக ஆதரவை பெற்ற அரசை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமரை மாற்ற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது ஜனாதிபதியின் முடிவில் இருக்கும்.
இதுபற்றிய எந்த அவசரமும் எதிர்க்கட்சிகளுக்கு தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்

பிரதமர் பதவியை எந்த சந்தர்ப்பத்திலும் துஷ்பிரயோகம் செய்யவில்லையெனவும் ஜனாதிபதி தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தி அரசு மீது எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை.

ஆனால் எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்; சில ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் தருகின்றன.

அனைத்து ஊடகங்களும் நடுநிலையுடன் செயல்பட்டு, உண்மை நிலைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp